• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மேட்டுப்பாளையத்தில் கொரோனா பேரிடர் மையம் திறப்பு !

May 20, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பொதுமக்களின் அவசியம் கருதி கொரோனா பேரிடர் மையத்தை (covid-19 relief care centre) இன்று (20.05.2021) காலை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சந்தக்கடையில் பேரிடர் உதவி மையம் துவங்கியுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் A.சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் A.காதர் பாட்ஷா, மாவட்ட செயலாளர் A.காஜா மைதீன், நகர செயலாளர் M.சையது அபுதாஹீர் #SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.S ஷபிக் அஹம்மது, கோவை வடக்கு மாவட்ட தலைவர் M.E அப்துல் ஹக்கீம், மேட்டுப்பாளையம் ஜக்கிய ஐமாத் தலைவர் J.முஹம்மது ஷரிப் செயலாளர் அக்பர் அலி, குழந்தைகள் நல மருத்துவர் Dr.முஹம்மது சுஹைல், சித்தா மருத்துவர் N.முஹம்மது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நகர தலைவர் F.முஹம்மது அப்பாஸ் அவர்கள் நன்றியுரையற்றினார்.

பொதுமக்கள் கொரானா பேரிடர் உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உதவி எண்கள்:

77 08 08 82 00

98 43 43 88 19

மேலும் படிக்க