• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம்

June 15, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் தற்பொழுது வரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முக்கியமாக கோவையில் குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் துணை மேயர் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க