• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் 182 பேருக்கு ரூ.18,20,000 வழங்கல்

April 5, 2023 தண்டோரா குழு

இஸ்லாமிய நலிவுற்ற, விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் படிக்கின்ற வருமானம் இல்லாத பெண்கள் ஆகியவர்களுக்காக,தமிழ்நாடு அரசு மூலமாக தொழில் உதவி செய்வதற்காக முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் என்ற அமைப்பை தமிழ்நாடு அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருக்கின்றது. இதில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அரசின் சார்பாக மூன்று பேரும் பொதுமக்கள் சார்பாக ஆறு பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இச்சங்கம் செயல்படுகின்றது.

இஸ்லாமிய நலிவுற்ற, விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் படிக்கின்ற வருமானம் இல்லாத பெண்களுக்காக தமிழ்நாடு அரசு மூலம் உதவும் நோக்கில் இச்சங்கத்தின் சார்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் தலா ரூபாய் 10,000/= வீதம் சுமார் 182 நபர்களுக்கு ரூபாய் 18,20,000/= வழங்கப்பட்டது. மேலும் டெம்கோ வங்கி மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பம் செய்த முஸ்லிம் பெண்களில் முதல் கட்டமாக 13 பெண்களுக்கு தலா ரூபாய் 47,500/= வீதம் மொத்தம் ரூபாய் 6,17,000/= காசேலையாக பயனாளிகளுக்கு முறையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அல்ஹாஜ் M.A.இனாயத்துல்லாஹ்,பொள்ளச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் அட்வகேட் N.ஷாநவாஸ்கான் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க