• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட புதிய ஆட்சியராக சமீரன் பொறுப்பேற்பு !

June 16, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட புதிய ஆட்சியர் கீ.சு.சமீரன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதற்கான பொறுப்பு ஆவணங்களை சமீரனிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமீரன்,

கோவை மாவட்டத்தில் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தொற்று விகிதத்தை தரை மட்டத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த மாதம் 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று முதலமைச்சரின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 1500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது.இதற்கு கோவை பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி உள்ளனர். பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், தற்பொழுது ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்துள்ள நிலையில் கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க