• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட தயாரிப்பாக பம்பு தேர்வு – சீமா வரவேற்பு

September 10, 2021 தண்டோரா குழு

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) 68-வது ஆண்டு கூட்டம் கோவையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமாவின் தலைவராக கே.வி.கார்த்திக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டி.விக்னேஷ், மிதுன் ராமதாஸ், மா.செந்தில்குமார்ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சீமா தலைவர் கே.வி.கார்த்திக் கூறியதாவது:

ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கும், கோவை மாவட்ட தயாரிப்பாக பம்புகளை தேர்வு செய்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டத்தின் கீழ், 150 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாவட்டத்துக்கென தேர்வு செய்யப்பட்ட தயாரிப்பு, சர்வதேச சந்தையில் வெற்றிபெற தேவையான உட்கட்டமைப்பு மற்றும் அனைத்து வசதிகளை உருவாக்க அரசு வழிவகுக்கும்.

சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் இந்திய பம்புசெட்டுகளின் தேவையும், இத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் அரசு உதவிகளும், கோவையை உலக பம்புகள் தயாரிப்பு மையமாகமாற்றும் என நம்புகிறேன். தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஏற்றுமதி கூட்டமைப்பை உருவாக்கும் பணியும் துவங்கியுள்ளது. சீமாவின் கீழ் செயல்படப்போகும் இந்த கூட்டமைப்பு மூலம் பம்புசெட்டுகளை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க