• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாகபல்வேறு நலத்திட்ட உதவிகள்

July 28, 2021 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பிரபல நடிகர் தனுஷ் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார்.இதனை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக தனுஷ் பிறந்த நாள் நிகழ்ச்சியாக காலை முதலே கிழக்கு நகரம், துடியலூர் நகரம் மற்றும் பகுதி,மேட்டுப்பாளையம், சிங்கை நகரம் மற்றும் பகுதி,கவுண்டம்பாளையம்,தீத்திபாளையம்,பொள்ளாச்சி உட்பட பல்வேறு பகுதி நிர்வாகிகள் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை,இரத்த தானம்,நலத்திட்ட உதவிகள்,அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் டி.வி.எஸ்.நகர் இடையர்பாளையம் பகுதியிலுள்ள நிழல் ஆதரவற்றோர் சிறுமியர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை இல்ல நிர்வாகி சுதா ராஜ் இடம் வழங்கினர். தொடர்ந்து மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில்,

ஐந்து வருடம் தொடர்ந்து இந்த இல்லத்திற்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் இந்த திட்டத்தை துவங்கி தற்போது இரண்டாவது வருடமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் மணி, அருள்முருகன், அந்தோணி, வினோத்குமார், ராஜ்குமார், பழனி குமார், ராஜேஷ் கண்ணா மற்றும் மணிகண்டன் வெள்ளைச்சாமி விக்னேஷ் ராஜா, ராஜா சிங்கம் உட்பட பல்வேறு பகுதி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க