• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக மாபெரும் சைபர் கிரைம் விழிப்புணர்வு

November 29, 2024 தண்டோரா குழு

கூடுதல் காவல் துறை இயக்குனர் சைபர் கிரைம் பிரிவு,சென்னை ,காவல் கண்காணிப்பாளர்,சைபர்கிரைம் பிரிவு அவர்களுடைய அறிவுறுத்தலின்படியும். கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . K. கார்த்திகேயன்,வழிகாட்டுதலின்படியும், கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக,பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ / மாணவியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக இன்று Hindusthan College of Engineering and Technology and Hindusthan Institute of Technology கல்வி நிறுவனங்களில் மாபெரும் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1500 மாணவ / மாணவியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.சைபர் கிரைம் 2) நிகழ்ச்சியில் D.சுரேஷ்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பிரிவு , கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் A. சித்ராதேவி, காவல் ஆய்வாளர் , கோயம்புத்தூர் மாவட்டம் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் பெருகி வரும் சைபர் குற்றங்களான Digital arrest, Task fraud, Online Trading fraud, OTP Fraud, Matrimonial fraud , KYC Update Fraud, Etc., மற்றும் பெண்களுக்கெதிரான சமூக வலைதள குற்றங்கள் பற்றியும் , அக்குற்றங்களிலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சுமார் 800 மாணவ/மாணவியருக்கு இணைய தளம் மூலமாக சைபர் குற்றங்கள் தொடர்பாக வினா/விடைத்தேர்வு நடத்தப்பட்டு அதில் சிறப்பாக பதிலளித்த முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களால் எடுக்கப்பட்ட ஆறு சைபர்கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது.அதில் மூன்று சிறப்பான குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் குறும்படத்தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் பாரட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரி பேராசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முழு நிகழ்ச்சியும் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வின் இறுதியில் பண இழப்பிற்கு புகார் தெரிவிக்க சைபர் கிரைம் உதவி எண் : 1930 பற்றியும், மற்றும் அனைத்து சைபர் கிரைம் சம்பந்தமாக புகார் தெரிவிக்க வேண்டிய இணையதள முகவரி : www.cybercrime.gov.in.பற்றியும் மாணவ / மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் படிக்க