November 10, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர்கள் (கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்-2ன் கீழ்பயன் பெற நகர்புற மற்றும் கிராமப்புற விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.8,00,000
மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணபத்தாரர்கள் ஜாதி சான்று, ஆதார்கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைசான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மாவட்ட மாவட்ட சமீரன் தெரிவித்துள்ளார்.