June 27, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளம் மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் பணியாற்றி வந்த பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சு பணியாளருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கண்காணிப்பாளர் அலுவலத்தின் இரண்டாம் தளம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
மேலும் பெண் பணியாளருடன் பணியாற்றியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.