• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட கட்டிட பொறியாளர்களின் ஆலோசனை கூட்டம்

April 21, 2022 தண்டோரா குழு

கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கம் (CODCEA)வின் மாதாந்திர கூட்டம் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இதில் கோட்சியாவின் தலைவர் சுரேஷ்குமார் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரையாற்றினார்.

மேலும் இந்தாண்டு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் செயல்படுத்த உள்ள திட்டங்களை பற்றி எடுத்துரைத்து தீர்மானங்களாக நிறைவேற்றினார்.இந்தாண்டு செயல்படுத்தக்கூடிய திட்டங்களின் அறிக்கையை சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் திருமூர்த்தி புதிய கணிணியை சங்கத்திற்க்கு வழங்கினார்.இந்த கூட்டத்தில் பொருளாளர் ஜெயப்பிரகாஷ், உதவிதலைவர் ரமேஷ்குமார், இணைச் செயலாளர் ராமலிங்கம், இணைப் பொருளாளர் ரவிக்குமார்,அலுவலக நிர்வாகி ஜெகதீஸ்வரன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நாராயணமூர்த்தி மற்றும் காட்சியாவின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க