• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

June 4, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனநலம் பாதித்த மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியிறுத்தி மகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வால்பாறை சேர்ந்தவர் முருகானந்தவள்ளி இவர் தனது கணவர் மற்றும் மனம் வளர்ச்சி குன்றிய மகளுடன் கெஜமுடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லும் போது இவரது மனவளர்ச்சி குன்றிய 16 வயது மகள் சிந்தாமணி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மூக்கன் என்பவர் இவரது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.இதனால் இவரது மகள் சிந்தாமணி சத்தம்போட்டு உள்ளார்.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுமி சிந்தாமணியை மீட்டு வைத்துள்ளனர்.

இதனையடுத்து முருகானந்தவள்ளி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அருகில் உள்ளவர்கள் இது பற்றி கூறியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக முருகானந்தவள்ளி மூக்கன் மீது முடீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவர்கள் மூக்கன் மீது வேறு வழக்கு பதிவு செய்து விட்டு 1000 ரூபாய் அபராதம் வாங்கி கொண்டு வெளியில் விட்டு விட்டதாக தெரிகிறது.இதனையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார்.இந்த நிலையில் மூக்கன் அடிக்கடி தன்னிடமும் சிறுமி சிந்தாமணியிடமும் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும்,மேலும் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது மீறி எதாவது செய்தால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

எனவே புகார் அளித்தும் போலீசாரும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை.அதனால் எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு முருகானந்தவள்ளி ஒரு கேனில் மண்ணெண்ய் உடன் வந்து சிறுமி சிந்தாமணியுடன் தீக்குளிக்க முயன்றார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபாட்டு இருந்த போலீசார் முருகானந்தவள்ளி மற்றும் சிறுமி சிந்தாமனியை மீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறை தீர்ப்பு அலுவலகம் அழைத்து சென்று அங்கு உள்ள அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு எற்பட்டது.

மேலும் படிக்க