March 12, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதோர் இன்று ஆர்ப்பாத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதவர்கள்,38 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் மத்திய மாநில அரசுகள் எங்களை கண்டு கொள்ளாததால் எங்களுக்கு மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பு கிடைக்காத அவல நிலை தொடர்கிறது.
மேலும் இது பற்றி தகவல் கேட்டாலும் 1 மாதம் கழித்துவா என இழுத்தடிக்கின்றனர். பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் இதுநாள் வரை காது கேளாதோருக்கு வேலை அளிக்காதது ஏன்? நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் குடும்பம் உள்ளது நாங்களும் வாழக்கை நடத்த வேண்டும். எனவே எங்களுக்கு உரிய முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மத்திய மாநில அரசு வேலைகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் நாங்கள் எங்கள் உரிமைகளை பெற தொடர் போராட்டங்கள் நடத்தி இறுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.