• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி மருந்துகள் தெளிப்பு

March 17, 2020

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்டன.

கொரோனா பாதிப்பால் அனைத்து நிறுவனங்கள், பொது இடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகள், திரையரங்குகள், மால்கள் போன்றவையும் மார்ச் 31ம் தேதி வரை மூட அரசும் உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மக்கள் அதிகம் வருகின்ற கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் இன்று கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்டுகள், கழிவறைகள், மரங்கள், செடிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. நடைபாதை ஓரங்களில் கிருமி நாசினி பவுடர்கள் போடபட்டன.

மேலும் படிக்க