• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி

December 17, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சிவானந்தமில் சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகே விளாங்குறிச்சியில் இயற்கை அங்காடி வைத்து நடத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் இவரது சொத்தை வழக்கறிஞர் ஒருவர் அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது தீடீரென கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மீட்டு அவரை படுக்க வைத்தனர். மேலும் கார்த்திகேயனிடம் பேசும்போது பத்து தூக்கு மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு ஆசியரிடம் மனு கொடுக்க வந்ததாகவும், இதுவரை நான்கு முறைக்கு மேல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மனமுடைந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து , கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை முயற்சி செய்த கார்த்திகேயனின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க