• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை – ஆட்சியர் உத்தரவு

February 23, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயமுத்தூர் ஆட்சியர்  அலுவலகத்தில் சமீப காலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மட்டும் விளம்பரங்கள் ஒட்டுப்படுகிறது. அரசு சுவர்களிலோ அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியர்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ விளம்பர பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது  Prevention of Disfigurement Act 1959 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க