• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி.

October 13, 2024 தண்டோரா குழு

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக (12.10.2024, 13.10.2024) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2000 பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் என சுமார் 400 காவல்துறையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , 22 கஞ்சா குற்றவாளிகள் மீது 16 வழக்குகள் பதிவு செய்தும்,அவர்களிடமிருந்த சுமார் 28 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 84 நபர்கள் மீது 83 வழக்குகள் பதிவு செய்தும்,சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 38 நபர்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்தும்,சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 46 நபர்கள் மீது 46 வழக்குகள் பதிவு செய்தும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 நபர்களை தேடி பிடித்து கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.மேலும் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க