March 5, 2020
தண்டோரா குழு
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தப்படும் என அந்த அமைப்பின் மாநில தலைவர் கூறியுள்ளார்.
கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சி.ஏ.ஏ கொண்டு வரப்பட்டதற்கு பிரதமர், அமித்ஷா ஆகியோருக்கு பாராட்டு இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பில்லை. இஸ்லாமியர்களை திமுக, கம்யூனிஸ்ட், தி.க போன்ற அமைப்பினர் தூண்டி விடுகின்றனர்.இதை பயன்படுத்தி சமூகவிரொதிகள் கலவரத்தை தூண்ட முயல்கின்றனர்.சி.ஏ.ஏ வை ஆதரித்து இந்து முன்னணி ஜெபவேள்வி நடத்தி இருக்கின்றனர். நேற்றிரவு இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டு இருக்கின்றார். கலவரத்தை தூண்ட இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தப்படும்.
காவல் துறை இஸ்லாமியர்கள் பார்த்து பயப்படுகின்றது.காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காலை 6 முதல் மாலை 6 வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் போராடுபவர்களை கைது செய்ய காவல்துறை முன்வருமா என தெரியவில்லை. கோவையில் நடத்தப்படும் கடையடைப்பிற்கு வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம். மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கோவையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வரும் சி.ஏ.ஏ ஆதரவு போராட்டம் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படும் என்றார்.