April 5, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் இன்று(ஏப் 5)கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அரசு பேருந்துகள் 9௦% வரை இயக்கப்பட்டு வருகிறது.எனினும் வழக்கமாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் சூழலில் இன்று 20% அளவிற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் 52 பேருந்துகள் இயக்கப்படவில்லை.