December 18, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகராக பணி புரிந்து வந்தவர் ஆரோக்கியசாமி. இவர்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பந்தபாறை பகுதியில், தனது மனைவி பெயரில் தோட்டம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,இவரது தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில்,நேற்று தோட்டத்தில் உள்ள அறைகளை சோதனை செய்ததில், அவரது தோட்டத்தில் 380 கிலோ சந்தன மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில்,இன்று போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.