• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இல்லை – ஆட்சியர் அறிவிப்பு

October 1, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சி பகுதிகளை தவிர்த்து மற்ற 192 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினமான நாளை (2ம் தேதி) காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்படும். 32 ஊராட்சிகளில் மட்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்படமாட்டாது.

கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், பொது நிதி செலவினம், கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊரக பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குதல், குடிநீர் சிக்கனம், கொசுக்கள் மூலமாக பரவும் நோய் தடுப்பு பணிகள் குறித்து விவாதித்தல்,
மக்கள் திட்டமிடல் இயக்கம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பருவ மழை முன்னெச்சரிக்கை, தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் பயன்படுத்துதல், விரிவான கிராம சுகாதார திட்டம், தூய்மை கணக்கெடுப்பு பணி, மின் சிக்கனம், வாய்க்கால் சீரமைப்பு இயக்கம், கிராம வறுமை ஒழிப்பு திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு, பிரதமர் குடியிருப்பு திட்டம் தொடர்பாக விவாதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க