• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 25 மையங்களில் 10,955 நபர்கள் குடிமை பணிக்கான முதனிலை தேர்வினை எழுதுகிறார்கள்

October 6, 2021 தண்டோரா குழு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதனிலை தேர்வினை கோவை மாவட்டத்தில் 25 மையங்களில் 10 ஆயிரத்து 955 நபர்கள் எழுதுகிறார்கள்.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் (10ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடிமை பணிக்கான முதனிலை தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை 10 ஆயிரத்து 955 நபர்கள் எழுதுகின்றனர்.

இத்தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் எட்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்களும், வட்டாட்சியர் நிலையில் 25 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும், துணை வட்டாட்சியர் நிலையில் 46 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 931 அறை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வையினை பார்வையிடும் பொருட்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு செயலர் நிலையில் ஒருவரும், தமிழக அரசின் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் வெங்கடேஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கும் பேருந்து வசதிகள் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் தேர்வு கூடத்திற்கு, முற்பகல் தேர்விற்கு காலையில் 8.30 மணிக்கு முன்பாகவும் பிற்பகல் தேர்விற்கு 1.30 மணிக்கு முன்பாகவும் வளாகத்திற்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வரும் எந்த ஒரு தேர்வரும் தேர்வு வளாகத்தினுள் வர கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே தேர்வர்கள் தேர்வு தொடர்பான அறிவுரைகளை பெறும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும்.

தேர்வு வளாகத்திற்குள் மொபைல் போன், டிஜிட்டல் கைக்கடிகாரம் உள்ளிட்ட கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம். இத்தேர்வர்கள் கருப்பு மை பந்து முனைப் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தேர்வர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒன்று மத்திய மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களில் தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேர்வு மையங்களில் கைக்கழுவும் திரவம் மற்றும் முகக்கவசங்கள் இருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க