June 7, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் இன்று வெளியானது.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்ஜித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம்,பல எதிர்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது.
கோவையில் காலா திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது.இதற்காக காலையில் இருந்தே ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த்தின் கட் அவுட்டிற்க்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.பிறகு அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்து காலா திரைப்படம் வெளியானதற்கு கேக் வெட்டி கொண்டாடினர்.பின்னர் ஆரவாரத்துடன் படத்தை பார்க்க சென்றனர்.படம் வெளியாவதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.