• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 149 மையங்களில் 41,811 மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்

May 6, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 149 மையங்களில் 41811,மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.குறிப்பாக கடந்த 2 வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று என்பது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடங்களைக் கற்பித்து வந்தனர்.

தொடர்ந்து இந்த முறை வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.10ஆம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதுவதற்காக கோவை மாவட்டத்தில் 149 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டு அதில் 41811 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தொடர்ந்து கோவை மாவட்ட பள்ளிகளில் ஆர்வத்துடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டு, சானிடைசர் வழங்கி வருகின்றனர்.

தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் சமூக இடைவெளி பின்பற்றி அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர்.அதேபோல தேர்வு மையங்களில் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க