November 27, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.
இத்திட்டம் ரூ.5 ஆயிரத்து 25 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் 6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை 1235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.