• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணி துவக்கம்

January 2, 2020

கோவை மாவட்டத்தில் 12 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான,வாக்கு எண்ணும் பணி தற்போது துவங்கியுள்ளது.

கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும்,155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும்,228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும்,2034 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

முதல் கட்டமாக 5 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 77.31 சதவீதம் வாக்கு பதிவானது.இரண்டாம் கட்டமாக 7 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 75.69 சதவீதம் வாக்கு பதிவானது.

கோவை மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 3753 அலுவலகர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முகவர்களை தவிர அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை.

கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.

மேலும் படிக்க