• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது -ஆட்சியர் தகவல்

December 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது.

இதில் கோவைப்புதூர், திரு.வி.க.நகர், கல்லாமேடு, மெர்க்கரிக்கர் ரோடு, பேரூர் வடக்கு, பிள்ளையார்புரம், டோபிகானா, சூலூர், ஐயூடிபி காலனி, பன்னீர்மடை கிழக்கு ஆகிய இடங்களில் 10 திட்டப்பணிகள் மூலம் ரூ.220.74 கோடி மதிப்பீட்டில் 2561 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நேதாஜிபுரம், சித்தாபுதூர், பேரூர் வடக்கு பகுதி-1, பேரூர் தெற்கு பகுதி-2, எழில் நகர், வெரைட்டிகால் ரோடு, பச்சனம்பதி, எம்.ஜி.ஆர் நகர், வால்பாறை, உக்கடம் பகுதி -4, சிக்கதாசம்பாளையம், சுந்தரம் வீதி, மூங்கில் மடைகுட்டை, சி.எம்.சி.காலணி -2, சித்தாப்பதூர் பகுதி-2, முல்லை நகர் ஆகிய இடங்களில் 16 திட்டப்பணிகள் மூலம் 4503 குடியிருப்புகள் ரூ.395.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சமீரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க