தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (06.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 64 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில்,1 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் (FIR), 46 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும்,17 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.
இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை