May 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 9 ஆயிரத்து 452பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தினமும் 10 ஆயிரத்து 800 பேர் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகுகிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், பொதுஇடங்கள் என அப்பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 9 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 13,09452பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளோம். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிகபட்சமாக தினமும் 10,800 பேர் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,’’ என்றார்.