• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் காணாமல் போன 252 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த கோவை எஸ்.பி கார்த்திகேயன்

November 14, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(14.11.2024) கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் 48,36,500/-மதிப்புள்ள 252 பேரின் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் இந்த வருடத்தில் இதுவரை ரூபாய் 1,43,15,000/- மதிப்புள்ள 758 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் தவறவிட்ட அல்லது பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க CEIR PORTALபயன்படுத்துமாறும், CEIR PORTAL-ல் தொலைந்து போன செல்போனில் சிம்கார்டை உடனடியாக Block செய்ய வேண்டும் எனவும், பின்னர் தவறவிட்ட செல்போன் IMEI நம்பரை பதிவிட வேண்டும் எனவும், அதன் பிறகு செல்போன் தொலைத்த நபரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

பொதுமக்கள் தவறவிட்ட அல்லது பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.எனவே செல்போன்கள் திருட்டுப்போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது CIER வலைத்தளத்திலோ புகார் செய்யவும் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க