April 27, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக வாக்கு சீட்டுக்கள் வழங்கப்பட்டன.
மேலும், இந்திய ராணுவத்தின் பல பிரிவுகளில் பணி புரியும் ராணுவ வீரர்கள், பணியாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க, 19 ஆயிரத்து 29 வாக்குச் சீட்டுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதுநாள் வரை 14 ஆயிரத்து 868 மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்தும், 210 ராணுவ வீரர்கள் பணியாளர்களிடமிருந்தும் தபால் ஓட்டுக்கள் வரப்பெற்றுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே-2ம் தேதி அன்று காலை 8.00 மணி வரை பெறப்படும் தபால் ஓட்டுக்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தபால் வாக்கு பதிவு செய்து அனுப்பாத அரசு ஊழியர்கள் உடன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்க்கு தபால்வாக்குகளை அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.