• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் பெற்றுத்தர முக ஸ்டாலினுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை !

May 4, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் பெற்றுத்தர முக ஸ்டாலினுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு எண்கிற எண்ணிக்கையை கடக்கிறது.இதனால் அரசு மருத்துவ மனை, ஈஎஸ்ஐ மருத்துவமனை, கொடிசியா உள்ளிட்ட இடங்கள் நிரம்பி வருகின்றன.நோய் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப் படுகின்றனர். இதற்கிடையில், கோவையில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஐன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் பெற்றுத்தர முக ஸ்டாலினுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கோவையில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக் குறை இருப்பதாக அறிந்தேன்.கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வழக்கமாக வரும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக கோவை மாவட்டத்திற்கு பெற்றுத்தர முக.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க