July 30, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டதிற்குட்பட்ட கு.வடமதுரை மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற உள்ளது.
கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) அலுவலகத்தில் வரும் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் கு.வடமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என கு,வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் நந்தகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.