February 14, 2020
கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார்.
கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இராசாமணி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் 1,47,9,786 ஆண் வாக்காளர்களும், 1,51,1,767 பெண் வாக்காளர்களும், 370 முன்றாம் பாலினத்தவரும், மொத்தம் 2,99,1,923 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இதுதவிர, 18 – 19 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் 23878 புதிதாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.