November 18, 2017
தண்டோரா குழு
கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக பெரியய்யா கோவை காவல் ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யபட்டார்.
இந்நிலையில், கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கோவை மாநகரத்தில் குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.