• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் துறை சார்பில் வரும் 24 ஆம் தேதி முதல் கிரிக்கெட் போட்டிகள் !

September 15, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறை சார்பில் வரும் 24 ஆம் தேதி முதல் காவல் துறை மற்றும் பொதுமக்களிடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என காவல் ஆணையாளர் பலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காவல் துறை சார்பில் 10 அணிகளும் – பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. வரும் 24 முதல் 30 தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் காவல் துறை அணியினர் தனியாகவும், பொதுமக்கள் அணியினர் தனியாகவும் போட்டிகள் நடைபெறும். என தெரிவித்த அவர் அக்டோபர். 2 தேதி நடைபெறும் இறுதி போட்டியில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் அணியினர் இடையேயான போட்டி நடைபெறும்.

கிரிக்கெட் போட்டிக்கான நோக்கம்

1. காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்கும் முயற்சி.

2. இளைஞர் ஆர்வத்தை ஏற்படுத்தி போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி. ஏற்படுத்தப்படும்

இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதியில் நடைபெற உள்ளது.
என தெரிவித்தார்.

மேலும் படிக்க