கோவை மாநகர காவல் துறையின் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு/ நுண்ணறிவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யவும்,தகவல்களை ஒன்றிணைத்து ,பகுப்பாயந்து,சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பொது அமைதியை பாதிக்கக்கூடிய எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும்,நுண்ணறிவுப்பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான ஒரு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலி ஆகியவற்றை உருவாக்கவும் வேண்டி கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் , அறிவுரையின்படி கோவை மாநகரம் , சரவணம்பட்டியில் இயங்கி வரும் KG Invicta Services ( KGiS ) நிறுவனம் மூலமாக ஆக்டோபஸ் ( Octopus ) என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோவை வந்த தமிழக டிஜிபி C. சைலேந்திரபாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்படி ஆக்டோபஸ் ( Octopus)மென்பொருளின் சின்னத்தை (Logo ) வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் V. பாலகிருஷ்ணன் ,ஜெயமுரளி பாலகுருசுவாமி,தலைமை நிர்வாக இயக்குநர் ( CEO ) , KGiS ,சந்தோஷ் சதாசிவன்,இயக்குநர் , KGiS மற்றும் கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மென்பொருள் செயல்படும் விதம் குறித்து காவல்துறை இயக்குநர் அவர்கள் கேட்டறிந்து , ஆலோசனைகளை வழங்கினார்.மேற்படி மென்பொருளானது ஒரு முன்னோடி திட்டமாக கோவை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இம்மென்பொருள் மற்றும் செயலி மேம்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தபபடும் வாய்ப்புள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்