October 3, 2018
தண்டோரா குழு
கோவை போலீஸ் கமிஷனராக இருந்த பெரியய்யா மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனராக பெரியய்யா இருந்து வந்தார். இந்நிலையில் அவரை மேற்கு மண்டல ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,
அமலாக்கத்துறை கமிஷனராக இருந்த சுமித் சரண், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன், மண்டபம் அகதிகள் முகாம் ஐஜியாக பிரமோத் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.