• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் மதுபோதையில் வாகனம் இயக்கினால் கைது செய்யப்படுவார்கள் – கமிஷனர் எச்சரிக்கை

December 31, 2021 தண்டோரா குழு

கோவை மாநகரில் மதுபோதையில் வாகனம் இயக்கினால் கைது செய்யப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் அவர் கூறும்போது,

இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் ஒத்துழைப்பு தேவை. பாதுகாப்பு பணியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.1000 க்கும் மேற்ப்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.45 டிராபிக் செக்கிங் பாய்ண்ட் இன்று செயல்படும். அசம்பாவிதம் நடைபெற கூடாது.

விபத்துக்கள் ஏற்படக்கூடாதபடிக்கு
அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். மது போதையில் வாகனம் இயக்கினால் கைது செய்யப்படுவார்கள்.கோவை மாநகரில் 11 செக் போஸ்ட் உள்ளது.44 இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணிகள் நடைபெறும்.
23 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணிகள் இன்று மேற்கொள்ளப்படும்.இன்று மேம்பாலங்கள் மூடப்படும் என்றார்.கோவையில் அமைதியை காப்பாற்ற உள்ளோம்.சாதி மத மோதல் ஏற்படுத்தும் படி சமூக வலைதளத்தில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த ஆண்டு மாநகரில் 1872 சிசிடிவி கேமிராக்களை அமைத்துள்ளோம். முக்கிய பழைய வழக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.மேலும் முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிதர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை
துல்லியமாக மேற்கொண்டு வருகிறோம்.110 சி.ஆர்.பி.சி வழக்கு கடந்த 40 நாட்களில்
120 பேர் மீது பதியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மொத்தம் 239 பேர் மீது 110 சி.ஆர்.பி.சி.,வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரவுடிகளை கட்டுப்படுத்த
மாநகரில் இந்த ஆண்டு 70 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க