• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகரில் கூடுதலாக 30 சோதனை சாவடிகள் – ஆட்சியர் தகவல்

June 20, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதியில் உள்ள 12 சோதனை சாவடிகளுடன் தற்போது, கூடுதலாக 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்றுபரவல் வெகுவாக குறைந்து வருகிறது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளார்கள்.அதன்படி, தளர்வுகளுடன் இயங்கும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று
செய்யப்பட்டவர்களின்குடும்பங்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை விரைந்து கண்டறிய விரைவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவல கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் கூடாமல் கண்காணிக்கவும்,
மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளி ஆட்கள் யாரும் உள்ளே வராமலும், தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வெளியில் செல்லமால் இருப்பதையும் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர்கண்காணித்திட வேண்டும்.

மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள்சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பணியினை மேற்கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு கட்டாயம்தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தவேண்டும்.கோவை மாநகர பகுதியில் உள்ள 12 சோதனை சாவடிகளுடன் தற்போது, கூடுதலாக 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஊரக பகுதிகளின் அருகில் உள்ள நகர பகுதிகள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தவேண்டும்.கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில்செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய
வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.மேலும், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க