• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் – மாநகராட்சி ஆணையர்

August 14, 2019 தண்டோரா குழு

கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஷர்வன் குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சவாலான ஒன்றாக இருக்கிறது. மக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை பிரித்து கொடுக்க வேண்டும்.வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை நடைபெறுவது போல மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுத்திக்குள் கொண்டு வரப்படும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் குப்பை போடும் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி விரைவில் குப்பை வரி வாங்குவோம். மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், நாளைக்குள் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க