July 15, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துவந்த அதிகாரிகள் நிர்வாக வசதிக்காக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.அதன்படி, கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றிவந்த மதுராந்தகி, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றிய கு.விமல்ராஜ், கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு மாநகராட்சி துணை ஆணையாளராக கு.விமல்ராஜ் பொறுபேற்றுக் கொண்டார்.