July 24, 2021
தண்டோரா குழு
கோவை சொரிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கார கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை சௌரிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர்தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும் எனவும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து,உப்பிலிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்
முன்களப்பணியாளர்களிடம் பொதுமக்களிடம் கொசுவினால் ஏற்படும் நோய்களை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் எனவும், வீடுகளில் தேவையற்ற உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டைகள்,உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் முதலியவற்றை அப்புறப்படுத்தவும், முக்கியமாக கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்களிடம் முன்களபணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும்,கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், ககாதார
ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.