March 4, 2022
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரையில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 இடங்களிலும்,அதிமுக 3 இடங்களிலும்,எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து,கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19 வார்டில் வென்ற கல்பனா இன்று பொறுப்பேற்றார்.இந்நிலையில்,கோவை மாநகராட்சி துணை மேயராக 92 வது வார்டு திமுக உறுப்பினர் வெற்றிசெல்வன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.தேர்வு பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அவரிடம் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசித்து வரும் 92 வது வார்டில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.