• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் மூவரும் வெளிநடப்பு

June 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை மக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்வற்தாக சிறுவாணி அணையிலிருந்து நீரை பெற்று தந்த தமிழக முதல்வருக்கும்,குடிநீரை திறந்துவிட்ட கேரளா முதல்வருக்கும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோவை மாநகராட்சி பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைப்பதற்கான தீர்மானத்தை துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்மொழிந்த நிலையில் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மாநகராட்சி நிதி முறையாக பயன்படுத்தபடுவதில்லை எனவும் நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் மேயர் இல்லத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைப்பதை கண்டித்தும் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்தனர்.

பதாகைகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மாநகராட்சி பொது நிதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதில்லை எனவும், அதே வேளையில் மேயர் வீட்டை ஆடம்பரமாக பங்களாவாக மாற்ற ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மேயர் மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை எனவும் ரிசர்வ் சைட்டுகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று விதிகள் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் ரிசர்வ் சைட்டுகளை தனிநபருக்கு கொடுக்கின்றனர் எனவும் இது தவறான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

திமுக மேயர் கல்பனா வந்தபின் எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும்,
மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்ததாகவும் பிரபாகரன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தீர்மானம் தவிர 33 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

மேலும் படிக்க