May 18, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 130 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 80 மற்றும் 81-வது வாா்டுகளில் பணியாற்றி வந்த இரு தூய்மை பணியாளா்கள் அன்மையில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா்.இதையடுத்து மாநகராட்சியில் பணியாற்றும் 1900 நிரந்தர மற்றும் 3685 தற்காலிக என அனைத்து சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அண்ணல் அம்பேத்கா் பொது சுகாதாரம், தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 80, 81 மற்றும் 51-வது வாா்டுகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 130 பேருக்கு நேற்று சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து கிழக்கு மண்டலத்தில் இன்றும் சளி மாதிரி சேகரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதாக, மாநகராட்சி முழுவதும் இப்பணி நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.