May 7, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆணையாளர் விஜய்கார்த்திகேயன் IAS எழுதிய “ஒரே கல்லில் 13 மாங்காய்” புத்தக வெளியீடு மதுரையில் நேற்று(மே 6) நடைப்பெற்றது.இந்த புத்தகத்தின் முதல் பிரதியை அவரது தாயார் உமா கண்ணன் வெளியிட மதுரை மகாத்மா பள்ளி முதல்வர் பிரேமலதா பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்,மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் தலைமை தாங்கினார். தென் மண்டல கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கண்ணன் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு அதிகாரி அனிஸ் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.முன்னதாக
விஜயா பதிப்பகம் தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.
இந்நிகிழ்ச்சியின் ஒரு பகுதியாக புத்தக எழுதிய எழுத்தாளர் விஜய கார்த்திகேயனுக்கு பாராட்டுகளை சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர். மேலும்,நிகழ்கால வாழ்க்கைக்கு தேவையான கருத்துகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிகிழ்ச்சியில் கலந்துக் கொண்ட தென் மண்டல கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கண்ணன் கூறுகையில்,இந்நூலில் மூடநம்பிக்கையை தகர்த்தெறியும்,தன்னம்பிக்கை கருத்துக்கள் உள்ளதாகவும், இந்த நூல் இளைஞர்களை தன்னம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்றார்.
மேலும்,பட்டிமன்ற பேச்சாளர் ராஜாராம் மற்றும் ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்து பேசினார்.இவ்விழாவில் கோவை, மதுரை மற்றும் கோவில்பட்டி பகுதிகளை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.