May 29, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், கோவை மாநகராட்சியின் சார்பில், மாவட்டத்தில், மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள், மற்றும் புகார்கள் குறித்து கேட்டறிய கோவை மாவட்ட கொரோனா தடுப்பு பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சக்கரபாணி, மற்றும், ராமசந்திரன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்பொழுது, மாநகராட்சியின், சார்பில் தனிமைபடுத்தப்பட்ட இடங்கள், மற்றும் மாநகராட்சியில் நடமாடும் காய்கறி விநியோம் சீராக உள்ளதா? என்பது கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபணி,
நேற்றைக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில்,சுகாதார துறை அமைச்சர், கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனை செய்ததாகவும்,இதனைதொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுபடுத்த, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக புதிய ஆணையராக,சித்திக் அவர்களை நியமித்து உள்ளதாகவும்,தெரிவித்தார்,மேலும் நாளை தமிழக முதல்வர் இங்கு ஆய்வு நடத்த உள்ளதாகவும்,அனைத்து துறை அதிகாரிகளையும்,அழைத்து நாளை ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்,கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கோவை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றதாகவும், தெரிவித்தார், மேலும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் அறிவிப்புகளை முறையாக பின்பற்றி அதனை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.