• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 93 கவுன்சிலர்கள் புதுமுகம்

February 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 கவுன்சிலர்களில் 7 பேர் மட்டுமே பழைய கவுன்சிலர்கள். மீதமுள்ள 93 பேர் புதுமுக கவுன்சிலர்கள் ஆவர்.

கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கான தேர்தல் முடிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த 100 வார்டுகளில், 12-வது வார்டு ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூ.,), 44-வது வார்டு காயத்ரி (காங்கிரஸ்), 46-வது வார்டு மீனா லோகு (திமுக), 47-வது வார்டு பிரபாகரன் (அதிமுக), 52-வது வார்டு இலக்குமி இளஞ்செல்வி (திமுக), 56-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்), 72-வது வார்டு கார்த்திக் செல்வராஜ் (திமுக) ஆகிய 7 பேர் மட்டுமே பழைய முகங்கள்.

இவர்கள், ஏற்கனவே கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள். மாமன்ற கூட்டத்தின்போது. காரசார விவாதத்தில் பங்கெடுத்து பேசியவர்கள். மீதமுள்ள 93 கவுன்சிலர்கள் புதுமுகங்கள் ஆவர்.
மேலும், மொத்தமுள்ள 100 கவுன்சிலர்களில், 55 பேர் பெண் கவுன்சிலர்கள். இவர்களில், மீனா லோகு, இலக்குமி இளஞ்செல்வி, காயத்ரி ஆகிய மூன்று பேர் பழைய முகங்கள் ஆவர்.

மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மிக விரைவில் நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தின்போது, புதுமுக கவுன்சிலர்கள், கன்னிப்பேச்சு, பேசுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.கோவை மாநகராட்சி தேர்லையொட்டி, கடந்த ஜனவரி மாதம் 25ம்தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது, 100 வார்டுகளுக்கும் தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால், இன்று முதல் தேர்தல் விதி விலக்கிக்கொள்ளப்பட்டது.இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின், மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

மேலும் படிக்க