• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் -மாநகராட்சி கமிஷனர்

February 26, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 32 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், 24 துணை சுகாதார நிலையங்களிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும், 50 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும், 137 அங்கன்வாடிகள் மற்றும் மண்டபங்களிலும், 10 மொபைல் முகாம்களிலும், 11 டிரான்ஸிட் முகாம்கள் (ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில்) மற்றும் 80 பிற இடங்கள் என மொத்தம் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.

போலியோ செட்டு மருந்து முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே போலியோ சொட்டு மருந்து தினத்தன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க