• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் ரூ.177 கோடி சொத்து வரி வசூல்

January 7, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம்,வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.அந்த 5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர்.கடந்த 2021-22ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.150 கோடி நிலுவை தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டது.

அதேபோல் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,சொத்துவரி வசூலை தீவிரப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தற்போது வரை ரூ.177 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

‘‘ நடப்பு நிதியாண்டு மற்றும் கடந்த நிதியாண்டின் நிலுவை தொகை என மொத்தம் ரூ.524 கோடி சொத்து வரி வசூல் செய்ய வேண்டியுள்ளதில் ரூ.205 கோடி வரி வசூல் செய்யபட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.177 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவை தொகையில் 18 சதவீதமும், நடப்பு தொகையில் 47 சதவீதமும் சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் ஏற்கனவே பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க